தேசியம்
கனேடிய தேர்தல் 2021 செய்திகள்

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

கனேடிய பொது தேர்தலின் முதலாவது விவாதம் வியாழக்கிழமை இரவு நடைபெறுகின்றது.

பிரெஞ்சு மொழியில் நடைபெறும் இந்த விவாதத்தில் நான்கு கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் கலந்து கொள்கிறார்கள்.

Liberal கட்சி தலைவர் Justin Trudeau, Conservative கட்சி தலைவர் Erin O’Toole, Bloc Quebecois கட்சி தலைவர் Yves-Francois Blanchet, NDP கட்சி தலைவர் Jagmeet Singh ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul, மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை.

Quebec மாகாணத்தின் அதிகம் பார்வையாளர்களை கொண்ட TVA தொலைகாட்சியில் இந்த விவாதம் ஒளிபரப்பாகவுள்ளது.

TVA விவாதம் 2019 தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாகக் கருதப்பட்டது. TVA விவாதம் தலைவர்களின் விவாத ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு அதிகாரப்பூர்வ விவாதங்களை விட கூடுதலான விவாதமாகும்.

பொது தேர்தல் அதிகாரப்பூர்வ விவாதங்கள் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.அந்த விவாதங்கள் ஐந்து முக்கிய கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கும்.

ஆங்கிலத்தில் விவாதம் September 9 இரவு 9 மணி முதல் ஒளிபரப்பாகிறது .பிரெஞ்சு மொழி விவாதம் முந்தைய நாள் – September 8 இரவு 8 மணி முதல் – ஒளிபரப்பப்படும்.

Related posts

வட்டி விகிதத்தை உயர்த்திய கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

சீன இராஜதந்திரி கனடிய அரசாங்கத்தால் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!