தேசியம்
கட்டுரைகள் கனேடிய தேர்தல் 2021

கனடாவில் கட்டாய வாக்களிப்பு சாத்தியமா?

கட்டாய வாக்களிப்பு ஏன் சில நாடுகளில் வெற்றிகரமாக உள்ளது, ஆனால் கனடாவில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை? கனடாவின் வாக்களிப்பு பிரச்சனைகளுக்கு கட்டாய வாக்களிப்பு தீர்வாக இருக்க முடியுமா? அண்மைய பொதுத் தேர்தல்களில், கனேடியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வாக்குகளை அளிப்பதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்க விரும்பினர்.

கட்டாய வாக்களிப்பு சட்டங்கள் புதியவை அல்ல. Belgium 1893 முதல் ஆண்களுக்கும் 1948 முதல்பெண்களுக்கும் கட்டாய வாக்களிப்பை சட்டமாக்கியுள்ளது. 1924 முதல் அவுஸ்ரேலி யாவில்கட்டாய வாக்களிப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. பிரேசில், Brazil, Uruguay, Luxemburg ஆகியநாடுகளிலும் கட்டாய வாக்களிப்பு சட்டங்கள் உள்ளன.

ஆஸ்திரேலியாவில், தேர்தல் நாளில் குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். செல்லவில்லையென்றால், அவர்கள் ஒரு கடிதத்தைப் பெறுவார்கள். அவர்கள் ஏன் வாக்களிக்க செல்லவில்லை என்பதை விளக்கும் ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். இல்லையெனில் 20 முதல் 50 ஆஸ்திரேலிய டொலர் அபராதம் செலுத்த வேண்டும்.90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் 2019 தேர்தலில் வாக்களித்தனர். அங்குவாக்களிப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் சில சிறந்த வாக்களிக்கும்உரிமைகள் உள்ளன, உலகிலேயே அதிக வாக்குப்பதிவு நிகழும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும்ஒன்று.தொடர்ந்து 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக அங்கு வாக்குகள் பதிவாகின்றன. 1924 ஆம் ஆண்டிலிருந்து இந்த இலக்கம் நிலையாக உள்ளது.2019 பொது தேர்தலில், கனடாவின் வாக்களிப்பு 67 சதவிகிதம், 2015 இல் 68.3 சதவிகிதம், 2011இல் 61.1 சதவிகிதம்.கனேடிய தேர்தல் திணைக்களத்தின் வலைத்தளம் அவுஸ்ரேலியாவில் கட்டாய வாக்களிப்பின் வெற்றியை ஒப்புக்கொள்கிறது, ஆனால் கனடாவில் வாக்களிக்கும் உரிமை கனேடிய உரிமைகள்மற்றும் சுதந்திரத்தின் சாசனத்தால் (Canadian Charter of Rights and Freedoms) பாதுகாக்கப்படுகிறதுஎன்று குறிப்பிடுகிறது. வாக்களிப்பதை கட்டாயமாக்குவது கனடாவில் பிரபலமில்லாதவிருப்பமாக இருக்கலாம் எனவும் தேர்தல் திணைக்களம் கூறுகின்றது.

2014 ஆம் ஆண்டில், வாக்காளர் வீழ்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, Liberal கட்சியினர் கட்டாய
வாக்களிப்பு யோசனையை முன்வைத்தனர்.கட்டாய வாக்களிப்பை கனடாவில் ஆரம்பிக்க முடியுமா என்று ஒரு கணக்கெடுப்பையும் நடத்தினர். ஆனாலும் கட்டாய வாக்களிப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை. 2017 இல், Liberal கட்சியினர் தேர்தல்சீர்திருத்தம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின்னர் கட்டாய வாக்களிப்பைத் திணிக்க மாட்டோம் என தெளிவுபடுத்தினர். தேர்தல் சீர்திருத்தம் பொதுவாக கனேடியர்களிடையே பிரபலமாக இருந்தாலும் கட்டாய வாக்களிப்பு பிரபலமாக இல்லை என அந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 53 சதவீதம் பேர் கட்டாய வாக்களிப்பில் உடன்படவில்லை எனகூறினர்.

மிக சமீபத்தில், Conservative தலைவர் Erin O’Toole கடந்த April மாதத்தில் ஒரு மெய்நிகர் கூட்டத்தில் அவுஸ்ரேலியா கட்டாய வாக்களிப்பை எவ்வாறு நடத்துகிறது என்ற கேள்வியை எழுப்பி, இது கனேடியர்களுக்கு ஒரு விருப்பமாக இருக்குமா என வினவினார்.ஆனாலும் பின்னர் அவரும் தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங் கினார்.வாக்களிப்பது அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமையாகும். இது ஜனநாயகத்தின்முக்கியமான தூணாகும். கனடாவின் Conservative கட்சி, எப்போதும் கனேடியர்களின் உரிமைகளுக்காக முன்னிப்பார்கள் என ஒரு அறிக்கையில் கூறினார்  Toole.
கனேடிய தேர்தல் திணைக்களத்தின் தகவலின் படி, கட்டாய வாக்களிப்பு வாக்காளர்
எண்ணிக்கையை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கிறது – இது கனேடிய வாக்காளர் எண்ணிக்கையை 80 சதவிகித எண்ணிக்கைக்கு கொண்டு வரும்.

சபரி கிருபாகரன்

Related posts

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஹரி ஆனந்தசங்கரி

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை பகிரங்கமாக வெளிப்படுத்திய Longueuil நகர முதல்வர்

Leave a Comment