December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் விளையாட்டு அரங்கம்

Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் புதிதாக பெயரிடப்பட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

Torontoவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மைதானம் முன்னாள் நகர முதல்வர்  நினைவாக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது.

Etobicoke நகரில் Centennial பூங்காவில் இந்த விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

Rob Ford Stadium என இந்த விளையாட்டு அரங்கம் மறுபெயரிடப்பட்டது.

முன்னாள் நகர முதல்வர் Rob Fordடின் 55ஆவது பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை (28) இந்த விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் Ontario மாகாண முதல்வரும் Rob Fordடின் சகோதரருமான Doug Ford, Toronto நகர முதல்வர்  Olivia Chow, Rob Fordடின் புதல்வி Stephanie Ford, Rob Fordடின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Torontoவின் 64வது நகர முதல்வர் Rob Ford 2016 இல் தனது 46 வயதில் அரிய வகை புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

Related posts

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிவாயு விலை

Lankathas Pathmanathan

Ontarioவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு Ford அரசாங்கமே காரணமென 62 சதவீதம் பேர் கருத்து

Lankathas Pathmanathan

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment