தேசியம்
செய்திகள்

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வி

நாடாளுமன்ற சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வியடைந்தது.

கட்சி சார்பான குற்றச்சாட்டுகளின் பேரில் சபாநாயகர் Greg Fergusசை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற்றது.

Conservative தலைமையிலான இந்த பிரேரணையின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (28) வாக்களித்தனர்.

இந்த வாக்களிப்பு 168 க்கு 142  என்ற வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Liberal, புதிய ஜனநாயக கட்சி, பசுமை வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில்  சபாநாயகருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Conservative, Bloc Quebecois கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில்  சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தனர்.

சபாநாயகர் பதவியில் இருந்து Greg Fergus உடனடியாக விலகி எதிர்வரும் திங்கட்கிழமை புதிய சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்த பிரேரணை கோரியது.

ஏழு மாதங்களுக்கு முன்னர் சபாநாயகராக பதவி ஏற்ற Greg Fergus, பாரபட்சமான நடத்தை குறித்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுகளுக்கு புதியவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பத்து நாள் தென்கிழக்கு ஆசியா பயணத்தில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடாவின் பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்பில் போராட்டம்

Lankathas Pathmanathan

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment