தேசியம்
செய்திகள்

Montreal: கத்திக் குத்தில் மூவர் மரணம்

Montrealலில் கத்திக் குத்துக்கு இலக்காகி மூன்று பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்கிழமை (21) மாலை Plateau-Mont-Royal borough  பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

10 பேருக்கு இடையில் நிகழ்ந்த சண்டையில் இந்த கத்திக்கு குறித்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது, “கூர்மையான ஆயுதத்தால்” காயமடைந்த மூன்று ஆண்களை கண்டனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டது.

பலியானவர்கள் 15, 23, 25 வயதுடையவர்கள்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் சந்தேக நபர் அல்லது சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மரணங்கள் Montreal நகரின் 14, 15, 16வது கொலைகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

4 மாகாணங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெற ஆரம்பித்தனர்

Gaya Raja

கொலையாளி Robert Pickton மரணம்

Lankathas Pathmanathan

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment