தேசியம்
செய்திகள்

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

இலங்கையில் போரின் போது புரியப்பட்ட குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் பொறுப்புக் கூறப்படுவதற்கும் எப்போதும் குரல் கொடுப்போம் என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடிய நாடாளுமன்றம் May 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக அங்கீகரித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

2022 இல் Scarborough – Rouge Park நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் பிரேரணையை தொடர்ந்து கனடிய நாடாளுமன்றத்தால் May 18 தமிழின படுகொலை நினைவேந்தல் நாளாக ஒருமனதாக நிறுவப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை Brampton நகர சபை நினைவு கூர்ந்தது.
தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள்:

தமிழர் சமூகம் எதிர்கொண்ட அட்டூழியங்களுக்கு நியாயம் கிடைப்பதில் இன்றும் என்றென்றும் தமிழ் சமூகத்துடன் உறுதுணையாக நிற்பேன் – புதிய ஜனநாயக கட்சி தலைவர் Jagmeet Singh.

அர்த்தமற்ற வன்முறையின் தாக்கத்துடன் தொடர்ந்து வாழும் கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகங்களுடன் இணைகிறோம் – சுகாதார அமைச்சர் Mark Holland.

தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சமாதானம், நீதி, பொறுப்புக்கூறலை மீண்டும் உறுதி செய்வோம் – Scarborough North நாடாளுமன்ற உறுப்பினர் Shaun Chen.

அடுத்த சந்ததியினருக்கு எமது இன்னல்கள் குறித்து கற்பிப்பதற்கும், தமிழ் மக்களுக்கு நீதி, சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்வோம் – போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம்.

ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தின் போது அரச அனுசரணையுடன் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்கள், உயிர் பிழைத்தவர்களை நினைவு கூறும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் இணைகிறேன் – Brampton நகர முதல்வர் Patrick Brown.

இழந்த உயிர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, தமிழ் சமூகத்தின் மீள்தன்மையை நினைவு கூறுகிறோம் – Toronto நகரசபை உறுப்பினர் Brad Bradford.

நீதிக்காகவும் விழிப்புணர்விற்காகவும் வரலாற்றின் துயரமான நிகழ்வுகளை நினைவில் கொள்வது அவசியம் – Toronto நகர சபை உறுப்பினர் Jamaal Myers.

இக்கொடுமையால் தொடர்ந்து பாதிக்கப்படும் பல தமிழ் Ontario வாசிகளுடன் இணைந்து இழந்த உயிர்களை நினைவில் கொள்கிறோம் – Ontario Anti-Racism Directorate.

இனப்படுகொலையின் போது இழந்த ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் உயிர்களையும், அவர்களின் கதைகளை ஒருபோதும் மறக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம் – Toronto மாவட்ட பாடசாலை வாரியம்.

இனப்படுகொலையின் போது இழந்த ஆயிரக்கணக்கான உயிர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் – Peel மாவட்ட பாடசாலை வாரியம்.

Related posts

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற முன்னாள் கனடிய தமிழர்

Lankathas Pathmanathan

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதியில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

Leave a Comment