தேசியம்
செய்திகள்

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Ontario மாகாணத்தின் Kingston நகருக்கு வடக்கே ஏரியில் படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர்.

சனிக்கிழமை இரவு படகு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் – ஐந்து பேர் காயமடைந்தனர்.

Bobs Lake பகுதியில் இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Ontario மாகாண காவல்துறை (Ontario Provincial Police – OPP) தெரிவித்தது.

பலியானவர்கள்:

• 21 வயதான பெண் (South Frontenac Township)

• 22 வயதான பெண் (Elginburg)

• 23 வயதான ஆண் (South Frontenac)

காயமடைந்த ஏனைய ஐவரும் 21 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள்.

காயமடைந்தவர்கள் Kingston மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் கடுமையான காயங்களுடன் Ornge Air மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக OPP செய்தித் தொடர்பாளர் Bill Dickson ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Related posts

Mississauga விபத்தில் காயமடைந்த தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ரூபன் ராஜகுமார்

Gaya Raja

Leave a Comment