December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார்!

நீண்ட கால Toronto நகர சபை உறுப்பினர் Jaye Robinson காலமானார்.

அவரது அலுவலகம் இந்த தகவலை வெள்ளிக்கிழமை (17) வெளியிட்டது.

அவர் Don Valley மேற்கு தொகுதியை 14 ஆண்டுகள் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

நான்கு முறை நகர சபை உறுப்பினராக இருந்த Jaye Robinson, TTC இன் தலைவராக சிறிது காலம் பணியாற்றியவர்.

சில வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த 61 வயதான இவர், வியாழக்கிழமை (16) இரவு காலமானார்.

இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

Jaye Robinson மறைவுக்கு, Toronto நகர முதல்வர் Olivia Chow இரங்கல் தெரிவித்தார்.

Jaye Robinson மரணத்தால் வெற்றிடமாக உள்ள நகரசபை உறுப்பினர் பதவியை எவ்வாறு நிரப்புவது குறித்து  நகர சபை பரிசீலிக்க ஆரம்பிக்கவில்லை என Olivia Chow கூறினார்.

Jaye Robinson நினைவாக நகர மண்டபங்களில் கொடிகள் வெள்ளிக்கிழமை (17) அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

ஆவரது இறுதிச் சடங்குகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

Related posts

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு விசாரணையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

Saskatchewan First Nation பயணமாகும் பிரதமர்!

Gaya Raja

Leave a Comment