நான்கு இஸ்ரேலிய ‘தீவிரவாத குடியேற்றவாசிகளுக்கு’ கனடா தடை விதித்துள்ளது.
பாலஸ்தீனியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.
கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.
இவர்கள் பாலஸ்தீனிய குடிமக்கள், மேற்குக் கரையில் உள்ள அவர்களின் சொத்துக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மீது ஏற்கனவே இந்த ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவும் இவர்கள் மீது தடை விதிக்கும் என கடந்த February மாதம் வெளியுறவு அமைச்சர் Mélanie Joly கூறியிருந்தார்.
இந்த பொருளாதாரத் தடைகள் கனடாவின் அணுகுமுறையில் ஒரு முன்னேற்றம் என அமைச்சர் தெரிவித்தார்.