இலக்கிய நோபல் பரிசு பெற்ற கனடிய இலக்கிய ஜாம்பவான் Alice Munro காலமானார்.
சிறுகதை குரு என்று போற்றப்படும் அவர் தனது 92 ஆவது வயதில் காலமானார்.
2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற அவர், Ontario மாகாணத்தின் Port Hope நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (13) காலமானார்.
உலகின் மிகவும் மதிப்புமிக்க சமகால எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டவர்.
வரலாற்றில் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராகவும் Alice Munro நோக்கப்பட்டவர்.
இவர் பல வருடங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தார்.