கனடாவின் மேற்கில் இருந்து கிழக்கு வரை காட்டுத்தீ புகை பரவுவதால் காற்றின் தர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
காட்டுத்தீ காரணமாக சுற்றுச்சூழல் கனடா காற்று தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
British Columbia, Alberta, Manitoba, Saskatchewan, Northwest Territories பகுதிகளில் காற்று தர எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காட்டுத்தீயின் புகை கிழக்கு நோக்கி நகரக் கூடும் என முன்னறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
“காட்டுத்தீ புகை மிகவும் மோசமான காற்றின் தரத்தை ஏற்படுத்துகிறது” என சுற்றுச்சூழல் கனடா ஒரு சிறப்பு காற்றின் தர அறிக்கையை வெளியிட்டது
“காட்டுத் தீ புகை அனைவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
காட்டுத்தீயின் தாக்கம் Ontario, Quebec மாகாணங்களுக்கு பரவும் என எச்சரிக்கப்படுகிறது.
கனடா முழுவதும் தற்போது 138 காட்டுத் தீ எரிந்து வருகிறது.
இவற்றில் 40 கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.