பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (Women’s National Basketball Association – WNBA) அணியொன்று விரைவில் Torontoலில் அறிவிக்கப்படவுள்ளது.
இது குறித்த அறிவித்தல் விரைவில் வெளியாகும் என நம்புவதாக Toronto நகர முதல்வர் Olivia Chow தெரிவித்தார்
Torontoவில் எதிர்பார்க்கப்படும் இந்த அணியின் விரிவாக்கம் பெண்கள் தொழில்முறை கூடைப்பந்து சங்கத்தின் முதல் கனடிய அணியை குறிக்கும்.
WNBA முதன்மையான பெண்கள் தொழில்முறை கூடைப்பந்து சங்கமாகும்.
இதில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட 12 அணிகள் அங்கம் வகிக்கின்றன.