கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய நாடாளுமன்றத்தில் நடத்த இருந்த “முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை” இரத்து செய்ய தீர்மானித்துள்ளது.
திங்கட்கிழமை (06) நடைபெற்ற கனேடிய தமிழர் கூட்டின் நீதிக்கான அழைப்பு நிகழ்வில் இந்த அறிவித்தல் வெளியானது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கனேடிய தமிழர் கூட்டின் பிரதிநிதி சட்டத்தரணி அபிமன்யு சிங்கம் இந்த தகவலை வெளியிட்டார்.
வியாழக்கிழமை (09) கனடிய நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த இந்த நினைவு நிகழ்வை CTC இரத்து செய்ய தீர்மானித்துள்ளதை கனேடிய தமிழர் கூட்டு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது என அபிமன்யு சிங்கம் கூறினார்.
தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு அறிக்கையையும் CTC விரைவில் வெளியிட இணங்கியுள்ளதாக தெரியவருகிறது.
May 18, 2022 அன்று கனடிய நாடாளுமன்றம் தமிழர்கள் மீதான இன அழிப்பை அங்கீகரித்துள்ளது.
தமிழர்கள் மீதான இன அழிப்பை, கனடாவில் பல்வேறு மட்டங்களில் உள்ள ஆட்சி மன்றங்களும் அங்கீகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.