February 22, 2025
தேசியம்
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பினர்

வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பியுள்ளனர்.

கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை செவ்வாய்க்கிழமை (07) வெளியிட்டது.

ஆறு கனடிய குழந்தைகளும் செவ்வாய் அதிகாலை Montreal நகரை சென்றடைந்துள்ளதாக இந்த குடும்பத்திற்கு உதவி செய்து வரும் வழக்கறிஞருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதிலும், புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆதரவையும் கவனிப்பையும் அவர்கள் பெறுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஆனால் அவர்களின் தாயாரின் இருப்பிடம், நிலை குறித்த தெளிவான விபரம்  நிலை வெளியாகவில்லை.

Quebec மாகாணத்தை சேர்ந்த குழந்தைகளின் தாய், பாதுகாப்பு காரணங்களுக்காக கனடா திரும்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Al-Roj தடுப்பு முகாமில் இருந்து இந்த பெண் வெளியேறிய போதிலும், அவர் எங்கு உள்ளார் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல வெளிநாட்டவர்களில் கனடியர்களும் அடங்கினர்.

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கனடிய பெண்கள், குழந்தைகளை மீள அழைப்பதற்கு கனடிய அரசாங்கமே முன்னர் ஏற்பாடு செய்திருந்தது.

இருப்பினும், பல கனடிய குழந்தைகளும் அவர்களின் கனேடியரல்லாத தாய்மார்களும் தொடர்ந்து அவநம்பிக்கையான சூழ்நிலையில் வாழ்கின்றனர்.

பல கனடிய ஆண்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Freeland துன்புறுத்தப்பட்டது குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

Ansar Allah இயக்கத்தை பயங்கரவாத குழுவாக தடை செய்ய வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Leave a Comment