தேசியம்
செய்திகள்

சீக்கிய தலைவர் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!

சீக்கிய தலைவர் கனடாவில் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombia வில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை குறித்த விசாரணையில் மூவர் கைதாகியுள்ளனர்.

இந்த கொலையில் இந்திய அரசாங்கத்துடனான சாத்தியமான தொடர்புகளை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் இந்த கைதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் 28 வயதான Karanpreet Singh, 22 வயதான Kamalpreet Singh, 22 வயதான Karan Brar என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
.
Hardeep Singh Nijjarரின் மரணத்தில் இவர்கள் ஒவ்வொருவரும் முதல் நிலை கொலை, கொலைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு என மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

வெள்ளிக்கிழமை (03) காலை கைது செய்யப்பட்ட மூவரும் Edmonton நகரில் வசித்து வந்த இந்திய பிரஜைகள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 வயதான Hardeep Singh Nijjar சுட்டுக் கொல்லப்பட்ட நாளில், அவர்கள் British Colombia மாகாணத்தின் Surrey, நகரில் வசித்து வந்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

கைதான Karanpreet Singh, Kamalpreet Singh, Karan Brar

கைது செய்யப்பட்டவர்கள் குறித்து புலனாய்வாளர்களால் Hardeep Singh Nijjarரின் குடும்பத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரின் குடியுரிமைக்கு நிலை குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் கனடாவிற்கு வந்ததாகவும் அவர்கள் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை எனவும் அதிகாரிகள் கூறினர்.

இந்தக் கொலையில் ஏனைய சிலருக்கும் பங்கு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் தனி சீக்கிய தாயகத்திற்காக வாதிடும் காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளராக Hardeep Singh Nijjar இருந்துள்ளார்.

Hardeep Singh Nijjar இந்தியாவில் தேடப்படும் நபராக இருந்தார்.

அதிகாரிகள் அவரை 2020 இல் பயங்கரவாதி என அறிவித்தனர்.

அவரது மரணத்தின் போது  British Colombia வில் புலம்பெயர்ந்து வாழும் சீக்கிய மக்களிடம் காலிஸ்தான் குறித்த அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த கொலை கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார்.

இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சாத்தியமான தொடர்பு குறித்து புலனாய்வு சேவைகள் விசாரணை செய்வதாக Justin Trudeau தெரிவித்த பின்னர் இரு நாட்டின் இராஜதந்திர நெருக்கடி நிலை அதிகரித்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கனடியர்களுக்கு விசா சேவை முடக்கியதுடன், கனடிய தூதரக அதிகாரியை இந்தியா வெளியேற்றியுள்ளது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic Leblanc மறுத்துள்ளார்.

Related posts

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment