December 12, 2024
தேசியம்
செய்திகள்

இரண்டு இடைத்தேர்தலில்  Progressive Conservative வெற்றி

இரண்டு Ontario தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில்  Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது.

Milton, Lambton-Kent-Middlesex தொகுதிகளில் வியாழக்கிழமை (02) இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் Milton தொகுதியில் Progressive Conservative கட்சியின் வேட்பாளர் Zee Hamid, Lambton-Kent-Middlesex தொகுதியில் Progressive Conservative கட்சியின் வேட்பாளர் Steve Pinsonneault வெற்றி பெற்றனர்.

Conservative கட்சிக்காக பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த February மாதம் அமைச்சர் Parm Gill  தனது மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

Lambton-Kent-Middlesex தொகுதியில் வெற்றிபெற்ற Steve Pinsonneault
Milton தொகுதியில் வெற்றிபெற்ற Zee Hamid

அதேவேளை முன்னாள் Progressive Conservative அமைச்சர் Monte McNaughton பதவி விலகியதை அடுத்து Lambton-Kent-Middlesex தொகுதி வெற்றிடமானது.

Liberal கட்சி புதிய தலைமையின் கீழ் எதிர்கொண்ட முதலாவது இடைத் தேர்தல் இதுவாகும்.

Bonnie Crombie கடந்த December மாதம் Liberal கட்சியின் தலைமை பதவியை வெற்றி பெற்றிருந்தார்.

முன்னாள் Mississauga  நகர முதல்வரான அவர், Milton இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வந்தார்.

ஆனாலும் இறுதியில் அவர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

Related posts

ஆரம்பமானது Quebec சட்டமன்றத்தின் 43வது அமர்வு

Lankathas Pathmanathan

வர்த்தக அமைச்சரின் முரண்பாட்டை ஆய்வு செய்ய வாக்களித்த நெறிமுறைக் குழு

Lankathas Pathmanathan

Toronto, Ottawa நகர முதல்வர்களுக்கு அதியுயர் அதிகாரம் – புதிய சட்டம் அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment