McGill பல்கலைக்கழகத்தில் உள்ள முகாமை அகற்றுமாறு காவல்துறையினரை Quebec முதல்வர் கோரினார்.
பலஸ்தீன ஆதரவு முகாம்கள் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைகழகங்களிலும், கனடாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் உருவாகியுள்ளன.
இதில் Toronto பல்கலைக்கழகம், McGill, UBC ஆகிய கனடிய பல்கலைகழகங்களும் அடங்குகின்றன.
Montrealலில் உள்ள McGill பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் மைதானத்தில் உள்ள பாலஸ்தீனிய ஆதரவு போராட்ட முகாமை அகற்றுமாறு காவல்துறைக்கு Quebec முதல்வர் Francois Legault அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (27) முதல் McGill பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை அகற்றுமாறு காவல்துறையினருக்கு இந்த வார ஆரம்பத்தில் McGill பல்கலைக்கழக நிர்வாகம் அழைப்பு விடுத்தது.
பல்கலைக்கழகத்தின் கோரிக்கைக்கு காவல்துறையினர் செவிசாய்த்து முகாமை அகற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களிடம் பேசிய Francois Legault கூறினார்
இந்த நிலையில் McGill பல்கலைக்கழக நிலை குறித்து மதிப்பீடு செய்து வருவதாக Montreal காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்
இதுவரை இந்த போராட்டம் அமைதியாக இருந்ததாகவும், அதில் உடனடியாக காவல்துறை அல்லது நகரம் தலையிட வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
இஸ்ரேல் ஆதரவு, பாலஸ்தீனிய ஆதரவு ஆதரவாளர்கள் McGill பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலின் இருபுறமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வியாழக்கிழமை (02) நடத்தினர்.