நெடுஞ்சாலை 401 விபத்தில் கைக்குழந்தை உட்பட நான்கு பேர் மரணமடைந்தனர்.
நெடுஞ்சாலையில் தவறான வழியில் வாகனம் பயணித்ததில் நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து Ontario வின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் – SIU – விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (29) இரவு Whitby நகரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
Clarington நகரில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணைக்கு மாலை 7:50 மணி அளவில் Durham பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
சந்தேக நபர் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையினரால் பின் தொடரப்பட்டபோது, சந்தேகத்திற்குரிய வாகனம் தவறான திசையில் சென்று 401 நெடுந்தெருவில் நுழைந்தது.
இதன் போது பல வாகனங்கள் நெடுஞ்சாலை 412 இன் கிழக்கே மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என Durham காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரு கைக்குழந்தை, அந்த குழந்தையின் 55 வயதான தாத்தா 60 வயதான பாட்டி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தின் சாரதியும் இதில் உயிரிழந்துள்ளார்.
மொத்தம் ஆறு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன
இந்த விபத்து குறித்த விசாரணைக்கு நெடுஞ்சாலை 401யில் ஒரு பகுதி இரண்டு பக்க போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
செவ்வாய்க்கிழமை (30) காலை நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தமது விசாரணையில் மேலதிக விவரங்களை SIU வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.