தேசியம்
செய்திகள்

சீக்கியப் பேரணியில் கனடாவின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு

புதுடில்லியில் உள்ள கனடிய தூதரை இந்தியா விளக்கமளிக்க வரவழைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (28) Torontoவில் நடைபெற்ற சீக்கியப் பேரணியில் கனடாவின் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் ஞாயிறன்று Toronto வில் நடைபெற்ற கல்சா தின பேரணியில் பங்கேற்றனர்.

சீக்கிய நம்பிக்கையை நினைவுகூரும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சிலர் காலிஸ்தான் என அழைக்கப்படும் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லும் தனி மாநிலத்தை  வலியுறுத்தும் வகையில் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்த பேரணியில் பிரிவினைவாதத்தை வலியுறுத்தும் நகர்வுகள் இருந்ததாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனை அடுத்து புதுடில்லியில் உள்ள கனடாவின் துணை உயர் ஆணையரை விளக்கமளிக்க இந்தியா திங்கட்கிழமை (29) முறைப்படி வரவழைத்துள்ளது.

இந்த விடயத்தில் கனடாவும் இந்தியாவும் பல தசாப்தங்களாக முரண்பாட்டில் உள்ளன

கடந்த ஆண்டு கனடிய சீக்கியத் தலைவரைக் கொன்றதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக Justin Trudeau குற்றம் சாட்டியதிலிருந்து இந்த உறவு குறிப்பிடத்தக்க அளவில் விரிசல் அடைந்துள்ளது.

சீக்கிய மக்கள் காலிஸ்தானின் பிரிவுக்கு அழைப்பு விடுப்பது உட்பட பேச்சு சுதந்திரத்தை மீற மாட்டோம் என கனடா வலியுறுத்துகிறது.

ஆனால் இந்த கருத்துக்கள் தனது அரசியலமைப்பை மீறுவதாக இந்தியா கூறுகிறது.

திங்களன்று வெளிப்படுத்தப்பட்ட இந்தியாவின் கண்டனம் குறித்து கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly’யின் அலுவலகம் உடனடியாக கருத்துகள் எதனையும்  தெரிவிக்கவில்லை.

Related posts

Yonge வீதி வாகன தாக்குதல் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Lankathas Pathmanathan

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

Leave a Comment