September 7, 2024
தேசியம்
செய்திகள்

கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது

கடன் மோசடி திட்டத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்தனர்.

இவர்களுக்கு எதிராக 102 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன

“Project Déjà Vu” என பெயரிடப்பட்ட விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் திங்கட்கிழமை (29) அறிவித்தனர்.

இவர்கள் “செயற்கை அடையாள மோசடியில்” (synthetic-identity fraud) ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

செயற்கை அடையாள மோசடி என்பது நிதி மோசடியில் ஒரு வடிவமாகும் என தலைமை விசாரணை அதிகாரி Det. David Coffey கூறினார்.

இதில் கற்பனையான தனிப்பட்ட தகவல்கள் நிதி நிறுவனங்கள், பிற வணிகங்களில் மோசடி கணக்குகளைத் திறக்கப் பயன்படுத்தப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

2022 October ரில் இவ்வாறு பல செயற்கை மோசடி கணக்குகளைக் கண்டறிந்த ஒரு நிதி நிறுவனம் இதனை காவல்த்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

2016 இல் ஆரம்பமான இந்த மோசடி திட்டத்தின் குற்றவாளிகள் 680 க்கும் மேற்பட்ட தனித்துவமான செயற்கை அடையாளங்களை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இருபது தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் தவறான அடையாளங்கள், தவறான ஆவணங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் செயற்கை அடையாள ஆவணங்கள், மின்னணு வார்ப்புருக்களை கண்டுபிடித்தாக அதிகாரிகள் கூறினர்.

கனடிய, வெளிநாட்டு நாணயங்களில் சுமார் 300,000 டொலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டன.

இந்த விசாரணையில் இதுவரை சுமார் 4 மில்லியன் டொலர் இழப்பை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த குற்றங்களில் கைதானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

முகமூடிகள் மேலும் இரண்டு மாகாணங்களில் கட்டாயமாகின்றது!

Gaya Raja

முதியவர்களை குறிவைக்கும் பண மோசடியில் தமிழர் கைது

Leave a Comment