தேசியம்
செய்திகள்

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

நெடுஞ்சாலை 400 இல் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்தார்.

Innisfil நகரில் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு விபத்தில் முடிவடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியானவர் வாகனம் ஒன்றில் 21 வயதான ஓட்டுநர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரணை தொடரும் நிலையில் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

Related posts

கனேடிய தங்க மகன் De Grasse!

Gaya Raja

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

Gaya Raja

Ontario, Quebec மாகாணங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மின்சாரத்தை இழந்தனர்

Leave a Comment