தேசியம்
செய்திகள்

தடுப்பூசி இழப்பீட்டு திட்டத்திற்கு மேலதிகமாக $36 மில்லியன்

தடுப்பூசி இழப்பீட்டு நிதிக்கு மத்திய அரசாங்கம் மேலதிகமாக 36 மில்லியன் டொலர்களை ஒதுக்குகிறது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தடுப்பூசிகளால் கடுமையாக காயமடைந்த அல்லது மரணமடைந்தவர்களுக்கு ஆதரவளிக்க வடிவமைக்கப்பட்ட திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் 36.4 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்குகிறது.

COVID-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்க ஆரம்பித்த காலம் முதல் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி இழப்பீடு வழங்குகிறது.

Liberal அரசாங்கம் இந்த திட்டத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 75 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை, OXARO எனப்படும் ஒரு தனியார் நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து 56.2 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளது.

இந்த திட்டத்தை செயல்முறைப்படுத்தும் OXARO, Quebec மாகாணம் தவிர ஏனைய இடங்களில் இருந்து பெறப்படும் இழப்பீடு கோரிக்கைகளை நிர்வகிக்கிறது.

December வரை, OXARO 11.2 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கியுள்ளது.

Quebecகில் 1985 முதல் மாகாண ரீதியான தடுப்பூசி இழப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது

இந்த தடுப்பூசி இழப்பீட்டு நிதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 7.75 மில்லியன் டொலர்களை Quebec மாகாணம் பெற்றது.

Liberal அரசாங்கம் கடந்த வாரம் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான திட்டத்தை ஈடுகட்ட மேலும் 36 மில்லியன் டொலர்களை ஒதுக்கியது.

உரிமைகோரல் செயல்முறையின் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்வதற்காக OXARO நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ததாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.

December வரை, OXARO 2,233 உரிமை கோரல்களைப் பெற்றுள்ளது.

அவற்றில் 138 உரிமைகோரல்களை அங்கீகரித்துள்ளது.

December 14, 2020 முதல் கனடாவில் 105 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் 0.01 சதவீதம் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுத்தது என Health கனடா தரவுகள் சுட்டிக்  காட்டுகிறது.

COVID தடுப்பூசி பெற்ற பின்னர் 488 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் நான்கு  தடுப்பூசி காரணமானவை என சமீபத்திய Health கனடா அறிக்கை குறிப்பிடுகிறது.

Related posts

மூன்றில் ஒரு கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்!

Lankathas Pathmanathan

அடுத்த வருடத்தில் மிதமான மந்த நிலையை நோக்கி கனடா செல்லும்

Lankathas Pathmanathan

Ontarioவிற்கு உதவிகளை அனுப்ப முடிவு செய்துள்ள மத்திய அரசு!

Gaya Raja

Leave a Comment