GO புகையிரதத்தின் மேற்கூரையில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவைத் தாண்டி Union புகையிரத நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சிறுவன் மேலும் மூன்று இளைஞர்களுடன் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் புகையிரதம் இயக்கத்தில் இருந்தபோது கூரையின் மீது ஏறியதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்த சிறுவன் புகையிரத கூரையில் இருந்து விழுந்தான் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த அபாயகரமான சம்பவம் குறித்த விசாரணையில் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதாக Metrolinx தெரிவித்துள்ளது.