கனடிய தமிழர் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ரவீனா ராஜசிங்கம் விலகினார்.
தனது பதவி விலகல் அறிவித்தல் திங்கட்கிழமை (22) ஒரு அறிக்கையில் அவர் வெளியிட்டார்.
அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் அவர் உறுதிப்படுத்தினார்.
Pickering – Uxbridge தொகுதியின் Conservative கட்சியில் வேட்பாளர் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார்.
தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து கனடிய தமிழர் பேரவையின் நகர்வுகளுக்கு ஆதரவு வழங்குவேன் என ரவீனா ராஜசிங்கம் கூறியுள்ளார்.
அவரது பதவி விலகல் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்ற அறிவித்தல் எதையும் அவர் வெளியிடவில்லை.
ரவீனா ராஜசிங்கம் தலைமையிலான கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம் பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் கடந்த சில மாதங்களாக முன்வைக்கப்பட்டு வந்தது.
கனடிய தமிழர் பேரவையின், இமாலைய பிரகடன முயற்சியில் ஈடுபாடு குறித்த பின்னணியில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.