தேசியம்
செய்திகள்

Sarnia நகரில் இயங்கி வந்த இரசாயன ஆலை மூடப்படுகிறது

Ontario மாகாணத்தின் Sarnia நகரில் இயங்கி வந்த ஒரு இரசாயன ஆலை மூடப்படுகிறது.

INEOS Styrolution என்ற இரசாயன உற்பத்தி ஆலை மூடப்படுகிறது.

பராமரிப்பு செயல்பாடுகளுக்காக செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக INEOS Styrolution சனிக்கிழமை (20) உறுதிப்படுத்தியது.

Aamjiwnaang முதற்குடியினர் பகுதியின் வடக்கு எல்லையில் புற்றுநோயை உண்டாக்கும் benzene இரசாயன வேதிப்பொருளின் அதிக அளவு கண்டறியப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த ஆலை மூடப்படுகிறது.

ஆனாலும் இந்த பணிநிறுத்தம் கடந்த வாரம் கண்டறியப்பட்ட benzene இரசாயன அளவுகளின் அதிகரிப்புகளுடன் தொடர்புடையதா என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை (16) benzene அளவு 115 ug/m3 (ஒரு கன மீட்டருக்கு micrograms) என்ற அளவை எட்டியது.

Ontario சுற்றுச்சூழல் அமைச்சகம்  benzene ஆண்டு சராசரி அளவை 0.45 ug/m3 என நிர்ணயித்துள்ளது.

Aamjiwnaang முதற்குடியினர் பகுதியில் வசிக்கும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், வேறு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Related posts

Liberal – NDP ஒப்பந்தம்: Delivering for Canadians Now, A Supply and Confidence Agreement

Lankathas Pathmanathan

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு கனடிய பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

Leave a Comment