December 12, 2024
தேசியம்
செய்திகள்

முதியவர்களை குறி வைத்த மோசடியில் 14 பேர் கைது

முதியவர்களை குறி வைத்த மோசடி குற்றச்சாட்டில் 14 பேர் கைதாகினர்.

மாகாணங்களுக்கு இடையிலான விசாரணையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police  – OPP) தெரிவித்துள்ளனர்.

கனடா முழுவதும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடி – emergency grandparents scam – குறித்த விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதானவர்கள்;

  • 30 வயதான MATTHEW MALLA
  • 25 வயதான MICHAEL BEAUCHAMP
  • 24 வயதான GIORDANO DE LUCA
  • 25 வயதான DAMIAN DUFRESNE
  • 26 வயதான FRANCESCO FARINACCIO-MODAFFERI
  • 30 வயதான FRANCO GALLUCCI
  • 27 வயதான JONATHAN GORAL
  • 26 வயதான CHRISTOPHER MELCHIORRE
  • 25 வயதான STEFANO CAUCCI
  • 26 வயதான MATTHEW MARRONE
  • 27 வயதான BRANDON COLELLA
  • 33 வயதான ERIN RUD
  • 25 வயதான SAMUEL FERRON
  • 36 வயதான STEVEN CHODJAI

இவர்கள் அனைவரும் Quebec மாகாணத்தின் Montreal பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக 56 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

January மாதம் முதல் மொத்தம் 739,000 டொலர்கள் மோசடி செய்யப்பட்ட 126 பாதிக்கப்பட்டவர்களை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பதினைந்து பேர் பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக கூடுதலாக $200,000 இழப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 46 முதல் 95 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவருகிறது.

நாடு முழுவதும் இவர்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், பெரும்பான்மையானவர்கள் Ontarioவில் வசிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரில் நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளதாகவும், ஏனைய 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

இதில் குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கருதப்படுகிறது.

Related posts

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan

கனடாவின் முன்னாள் ஐ.நா. அதிகாரி சீனா சார்பில் உளவு பார்த்தார்?

Lankathas Pathmanathan

தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Leave a Comment