தேசியம்
செய்திகள்

நான்கு தொகுதிகளில் அடுத்த மாதம் இடைத் தேர்தல்

Ontario, Quebec, Manitoba மாகாணங்களில் அடுத்த மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Manitoba மாகாணத்தில் இரண்டு, Ontario, Quebec மாகாணங்களில் தலா ஒன்று என மொத்தம் நான்கு தொகுதிகளில் இந்த இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

பிரதமர் Justin Trudeau இந்த இடைத் தேர்தல் அறிவித்தலை வெளியிட்டார்.

June மாதம் 19ஆம் திகதி இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

அரசியலில் இருந்து விலகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் பதவிக்கு பதிலாகவும், முன்னாள் Liberal அமைச்சரின் மரணத்தால் வெற்றிடமான ஒரு ஆசனத்திற்காகவும் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

Manitobaவில் Portage–Lisgar, Winnipeg South Centre Quebecகில் Notre-Dame-de-Grâce–Westmount, Ontarioவில் Oxford ஆகிய தொகுதிகளில் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது

இதில் Portage–Lisgar தொகுதியில் கனடா மக்கள் கட்சியின் தலைவர் Maxime Bernier போட்டியிடவுள்ளார்.

அதேவேளை Notre-Dame-de-Grâce–Westmount தொகுதியில் பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் Jonathan Pedneault போட்டியிடவுள்ளார்.

மற்றொரு நாடாளுமன்ற ஆசனம் Calgary Heritage தொகுதியில் வெற்றிடமாக உள்ளது,

அங்கு Alberta மாகாணசபை தேர்தல் முடிந்த பின்னர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கோரும் பிரதமருக்கான மனுவில் 286 ஆயிரம் பேர் கையெழுத்த்து

Lankathas Pathmanathan

NDP தலைமை வேட்பாளரான தமிழர் போட்டியிலிருந்து விலத்தப்படலாம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் வரிவிதிப்பு அச்சுறுத்தலுக்கு கனடா பதிலடி கொடுக்க வேண்டும்: Jagmeet Singh வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment