தேசியம்
செய்திகள்

வாகன திருட்டு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

வாகன திருட்டு விசாரணையில் 54 குற்றச்சாட்டுகளை Toronto காவல்துறையினர் பதிவு செய்தனர்.

இந்த வாகன திருட்டு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

April 6ஆம் திகதி ஆரம்பித்த விசாரணையில் 12 ஆம் திகதி கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைதானவர்களில் 17 வயதான சிறுவன் ஒருவனும் அடங்குகிறார்.

இந்த கைது நடவடிக்கையில் சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதில் காவல்துறையினர் வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த விசாரணையில் 18 ஆயிரம் டொலர்களுக்கு அதிகமான பணமும், பல கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

$175,000 மதிப்புள்ள BMW, $400,000 மதிப்புள்ள Lamborghini ஆகிய திருடப்பட்ட இரண்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.

சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

இலையுதிர் காலத்தில் மற்றொரு booster தடுப்பூசியை பெற பரிந்துரை

Lankathas Pathmanathan

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan

முன்னாள் ஆளுநர் நாயகத்தை நியாயப்படும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment