Montreal Olympic மைதானத்தில் வீழ்ந்த தொழிலாளி கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
திங்கட்கிழமை (16)மதியம் சுமார் 30 அடி வீழ்ந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் 30 வயதான ஆண் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Quebec மாகாண பணியிட பாதுகாப்பு வாரியம் இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பித்துள்ளது.
March 21 ஏற்பட்ட தீ விபத்தில் Olympic மைதானத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
275 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டிடத்தின் சேதமடைந்த பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியாளர்களில் ஒருவரே திங்கள் மதியம் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.