தேசியம்
செய்திகள்

Tel Aviv செல்லும் Air Canada விமான சேவை இரத்து!

Tel Aviv  செல்லும் Air Canada விமான சேவை இரத்து செய்யப்பட்டது.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் Torontoவிலிருந்து Tel Aviv செல்லும் Air Canada விமானம் இரத்து செய்யப்பட்டது

சனிக்கிழமை மாலை Torontoவிலிருந்து Tel Aviv செல்லும் விமான சேவையை Air Canada  இரத்து செய்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் தற்போது அதிகரித்து வரும் பதட்டங்கள் பதிலளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக Air Canada விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முடிவை Air Canada எடுத்துள்ளது

இந்த பிராந்தியத்தின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப தங்கள் அட்டவணையை சரி செய்ய முடிவு செய்துள்ளதாக Air Canada விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Torontoவிலிருந்து Tel Aviv வரை ஒரு வாரத்திற்கு நான்கு இடைவிடாத விமான சேவைகளை Air Canada இயக்குகிறது.

இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியதாக ஈரானின் அரசு ஊடகம் சனிக்கிழமை (13) அறிவித்தது.

இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த தாக்குதலுக்கு பிரதமர் Justin Trudeau கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

வார இறுதிக்குப் பின்னர் கனடாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்:நிபுணர்கள் எச்சரிக்கை!

Gaya Raja

April 28 அல்லது May 5 பொதுத் தேர்தல்? – ஞாயிறு அறிவித்தல்!

Lankathas Pathmanathan

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment