புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடனை அனுமதிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கனடிய அரசாங்கம் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் முதல் முறையாக கொள்வனவு செய்பவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட அடமானங்களில் 30 வருட கடனுதவி காலங்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
நிதியமைச்சர் Chrystia Freeland வியாழக்கிழமை Torontoவில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இது August 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் கூறினார்.
முதன் முறையாக வீடு கொள்வனவு செய்பவர்கள் RRSPயில் இருந்து மீளப்பெறும் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் எனவும் Chrystia Freeland கூறினார்.
மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் வெளியிடப்படும் April 16ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.