தேசியம்
செய்திகள்

கனடாவில் மீண்டும் தோன்றும் காட்டுத்தீ அபாயம்!

கனடாவில் மீண்டும் ஒரு காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

வறண்ட, வெப்பமான வானிலை முன்னறிவிப்புகள் எதிர்வரும் மாதங்களில் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக வெப்பமான குளிர்காலம் காரணமாக கனடா மற்றொரு அழிவுகரமான காட்டுத்தீ பருவத்தை எதிர் கொள்ளக்கூடும் என மத்திய அரசு கூறுகிறது.

எதிர்வரும் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் அதிக வறண்ட, வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக புதன்கிழமை (10) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது நாட்டின் பெரும்பகுதியை காட்டுத்தீ அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெற்கு Quebec, கிழக்கு Ontario,மேற்கு கனடா உட்பட பல பகுதிகள் April மாதத்தில் வழமையை விட அதிக காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்கின்றன என அதிகாரிகள் கூறினர்.

மழையின் அளவைப் பொறுத்து இந்த காட்டுத்தீ  அபாயங்கள் கோடை காலம் வரை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

ஏற்கனவே, 70க்கும் மேற்பட்ட கட்டுத் தீ எரிந்து வருகிறது.

குறிப்பாக வடக்கு British Columbia, வடக்கு Alberta, Northwest Territories ஆகிய பகுதிகளில் கட்டுத் தீ எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு கனடாவின் மிக மோசமான காட்டுத்தீ காலம் பதிவு செய்யப்பட்டது.

Related posts

மூன்று கொலைகள் தொடர்பான குற்றச் சாட்டில் Toronto பெண் கைது

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்கள் குறித்த அறிவித்தலை வெளியிடும் குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment