தைவான் நிலநடுக்கத்தில் காணாமல் போன கனடியர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
தைவானை தாக்கிய 7.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தின் காரணமாக 10 பேர் பலியானதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் பின்னர் பல நாட்களாக காணாமல் போன கனடியர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடனும், அவரின் குடும்பத்துடனும் தைவானின் உள்ள கனடிய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறியது.
மீட்கப்பட்ட கனடியர் Nicolas Lapointe என உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கப் பகுதியில் இருந்து மூன்று கனடியர்கள் மீட்கப்பட்டதாக தைவான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
தைவானில் 5,518 கனடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.