இமயமலைப் பிரகடனத்தை ஒரு உடன்படிக்கை அல்ல என கனடிய தமிழர் பேரவை (CTC) தொடர்ந்து தவறாக வகைப்படுத்தி வருவதை கனேடியத் தமிழர் கூட்டு கண்டித்துள்ளது.
கனேடியத் தமிழர் கூட்டு வியாழக்கிழமை (04) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த கண்டனம் வெளியானது.
கனடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பான கண்டனங்களும், தொடர்ந்து அமைதி காப்பது குறித்த கேள்விகளும் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிராக எந்தவிதமான இனப்படுகொலையும் நடைபெறவில்லை என்பதை கனடிய தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது
போர்க் குற்றவாளியான மஹிந்த ராஜபக்சவை சந்தித்ததோடு அவருடன் ஒளிப்படமும் எடுத்துக்கொண்ட விடயத்தில் CTC தொடர்ந்து முன்வைத்து வரும் நியாயப்பாடுகளையும் இந்த அறிக்கை கேள்விக்கு உட்படுத்துகிறது.
கனடிய அரசாங்கம் மஹிந்த ராஜபக்சவுக்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, CTC குறிப்பிட்ட தடையை பொருளாதார தடையாக மட்டும் வகைப்படுத்துவதை கண்டிக்கிறது.
இது போன்ற தடைகளின் நோக்கத்தையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவோ அல்லது கண்டு கொள்ளவோ இயலாத நிலையில் CTC தனது பார்வைப் புலனை இழந்துள்ளது என கனேடியத் தமிழர் கூட்டின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தத் தடை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், இத்தகைய தடைகளின் நோக்கங்கள் எப்போதும் முற்றிலும் அரசியல் சார்ந்தவையே என இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்படுகிறது.
இந்தத் தடையை வெறுமனே பொருளாதாரத்துடன் தொடர்புடையது என வகைப்படுத்தும் CTCயின் முயற்சியை கபடத்தனமானதும், பயங்கரமானதும் என கனேடியத் தமிழர் கூட்டு குற்றம் சாட்டுகிறது.
எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் சமூக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிரந்தர நிலைக் குழுவை நிறுவுவதற்கான செயல்முறையை CTC ஆரம்பிக்க வேண்டும் என கூட்டு அழைப்பு விடுகிறது.
கனேடியத் தமிழர் கூட்டின் முழுமையான அறிக்கை: