January மாதம் சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கனடாவின் சில்லறை விற்பனை January மாதம் 0.3 சதவீதம் குறைந்து 67 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.
புதிய வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் சில்லறை விற்பனை குறைந்துள்ளது.
ஒன்பது துணைத் துறைகளில் மூன்றில் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
குறிப்பாக வாகனம், அதன் உதிரிபாக விற்பனை 2.4 சதவீதம் குறைந்துள்ளது.
ஐந்து மாதங்களில் இந்த துறையின் முதல் சரிவு இதுவாகும்.