February 12, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை

நீண்டகால துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண கனடா தவறி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கனடாவின் முதற்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

24ற்கும் அதிகமான பழங்குடியின பகுதிகள் நீண்ட கால குடிநீர் அச்சுறுத்தலின் கீழ் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

கனடாவின் எல்லை நிறுவனம் சுதந்திரமான மேற்பார்வையின்றி தொடர்ந்து செயல்படுகிறது எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

சில புகலிடக் கோரிக்கையாளர்கள் பல மாதங்கள் அல்லது வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை LGBTQ சமுகம் குறித்த கனடாவின் நிலைப்பாட்டை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது.

Related posts

ஆறு நாள் பயணமாக பாப்பாண்டவர் கனடா வந்தடைந்தார்

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டு  முறையினை நீக்குவதற்கான திட்டம் ஆராயப்படுகிறது: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment