தேசியம்
செய்திகள்

தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைகிறது

வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் 2022 இல் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் கனடியர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது.

கனடிய புள்ளியியல் திணைக்களம் புதிதாக வெளியிட்ட தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது

தொண்டு நிறுவனங்கள் அதிகரித்த செலவீனங்களை எதிர்கொள்ளும் நிலையில், கனடியர்கள் வழங்கிய நன்கொடைகளின் தொகை குறைவடைகிறது.

பணவீக்கத்தின் மத்தியில் 2022 ஆம் ஆண்டில் குறைவான கனடியர்கள் தொண்டு நிறுவனங்களுக்கு பணத்தை வழங்கியுள்ளனர் என புள்ளியியல் திணைக்களம் வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளது.

2022 இல், ஐந்து மில்லியனுக்கும் குறைவான கனடிய வரி தாக்கல் செய்பவர்கள், அல்லது 17.1 சதவீதம் பேர், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மூன்று சதவீதம் உயர்ந்தாலும், முந்தைய ஆண்டை விட நன்கொடை அளிப்பவர்கள் எண்ணிக்கையில் இது 0.3 சதவீதம் குறைவாகும்.

மொத்த நன்கொடை தொகையும் 3.1 சதவீதம் குறைந்து 11.4 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

2016ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக நன்கொடை குறைந்துள்ளது.

மொத்த நன்கொடை தொகை 2021 இல் 11.5 சதவிகிதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

30 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவிற்கு வழங்கப்பட்டன!

Gaya Raja

Vaughan துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பிரதமர் இரங்கல்!

Lankathas Pathmanathan

அடுத்த கல்வி ஆண்டில் கல்விச் சபைகள் இணையவழி கல்வியை வழங்க வேண்டும்: Ontario அரசாங்கம் வலியுறுத்தல்

Gaya Raja

Leave a Comment