February 23, 2025
தேசியம்
செய்திகள்

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஒருவர் கைது

பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Liberal கட்சி நிதி திரட்டும் நிகழ்வில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.

வெள்ளிக்கிழமை (15) Torontoவில் விடுதி ஒன்றில் இந்த நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த விடுதிக்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பெரும் கூட்டம் திரண்ட நிலையில் Toronto காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.

இந்த மாத ஆரம்பத்தில் Torontoவில் பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடாகியிருந்த நிகழ்வொன்று இரத்து செய்யப்பட்டது.

Ontario கலைக்கூடத்தில் (Art Gallery of Ontario) இத்தாலி பிரதமர் Giorgia Meloni, கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ள ஏற்பாடாகியிருந்த இந்த நிகழ்வு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவாயில்களைத் தடுத்ததை அடுத்து இரத்து செய்யப்பட்டது.

Related posts

கடந்த காலாண்டில் கனேடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை

Lankathas Pathmanathan

Vaughan இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மூவர் காயம்

Lankathas Pathmanathan

விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment