February 23, 2025
தேசியம்
செய்திகள்

ஹைட்டியில் அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமையில் இருப்பார்கள்: Melanie Joly

ஹைட்டியில் தனது இராஜதந்திர உறுப்பினர்களின் எண்ணிக்கையை கனடிய அரசாங்கம் குறைத்து வருகிறது.

கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

ஹைட்டியின் தலைநகர் Port-au-Prince தூதரகத்தில் அத்தியாவசிய ஊழியர்கள் மாத்திரம் கடமையில் உள்ளதாக அமைச்சர் Melanie Joly அறிவித்தார்.

“இந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் கனடியர்களுக்கு ஆதரவாக ஹைட்டியில் எங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள இது அனுமதிக்கும்” எனவும் அவர் கூறினார்.

“எங்கள் தூதரும் தூதரக குழுவும் Port-au-Princeசில் இருந்து கனடியர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவார்கள்” எனவும் Melanie Joly தெரிவித்தார்.

நீண்ட காலத்திற்கு ஹைட்டிய மக்களுக்கு ஆதரவளிக்க கனடா உறுதியுடன் இருப்பதாக அமைச்சர்  கூறினார்.

ஆனால் தற்போதையை உடனடி முன்னுரிமை கனடியர்களின் பாதுகாப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan

Montreal யூத பாடசாலைகள் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

உடனடி மருத்துவ விடுப்பில் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் Kirsty Duncan

Lankathas Pathmanathan

Leave a Comment