தேசியம்
செய்திகள்

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Quebec மாகாணத்தில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலை வரை 18 தட்டம்மை நோயாளர்கள் மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என Quebec சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்த அதிகரிப்பு குறித்து சுகாதார அமைச்சகம் மாகாணம் முழுவதும் உள்ள பாடசாலை வாரியங்கள், சேவை மையங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது.

ஆரம்ப பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பாடசாலைகளில் தடுப்பூசி மையங்களை அமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

தடுப்பூசி தகவல்கள், நோயின் அறிகுறிகள், நோயின் பரவல் உள்ளிட்ட நோயின் நிலை குறித்து பெற்றோருக்கு தகவல் பகிரப்பட்டுள்ளது .

Related posts

புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனை வரவு செலவுத் திட்டம்: NDP தலைவர் Singh

Lankathas Pathmanathan

நீண்ட வார இறுதிக்கு முன்னர் எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan

தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்தது  

Lankathas Pathmanathan

Leave a Comment