December 12, 2024
தேசியம்
செய்திகள்

Luka Magnotta சிறை மாற்றம் குறித்து எழும் கேள்விகள்

சர்வதேச மாணவரை கொலை செய்த Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

கொலையாளி Luka Magnottaவின் சிறை மாற்றம் குறித்து கனடாவின் சீர்திருத்த சேவைகள் தலைவர் கேள்விகளை எதிர்கொள்ள உள்ளார்.

கனடாவின் சிறை மாற்றக் கொள்கைகள் குறித்த வரையறுக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற பரிசோதனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினர்.

2022 ஆம் ஆண்டில், Luka Magnottaவை அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் இருந்து நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

2014 இல் முதல் நிலை கொலைக்கு Luka Magnotta குற்றவாளியாக கண்டறியப்பட்டார்.

2012 இல் 33 வயதான Concordia பல்கலைக்கழக மாணவர் Jun Lin கொல்லப்பட்டது தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related posts

45 வானொலி நிலையங்களை விற்பனை செய்யும் Bell

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள்!!

Gaya Raja

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

Leave a Comment