February 22, 2025
தேசியம்
செய்திகள்

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையர்கள்!

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையை சேர்ந்த பிரஜைகள் என தெரியவருகிறது.

Ontario மாகாணத்தின் Barrhaven நகரில் ஒரு வீட்டில் இருந்து 6 பேரின் சடலங்கள் புதன்கிழமை (06) பின்னிரவு மீட்கப்பட்டன.

இதில் 4 குழந்தைகளும் அடங்குவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்தவர்கள் கனடிய பிரஜைகள் அல்ல எனவும் அவர்கள் இலங்கை பிரஜைகள் என Ottawaவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தேசியத்திடம் உறுதிப்படுத்தியது.

Ottawa காவல்துறையினர் இந்த உறுதிப்பாட்டை வழங்கியுள்ளதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஒரு குடும்பத்தை சேர்ந்த  மனைவி, குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், தந்தை உயிர் பிழைத்ததாகவும், உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் குறித்த எந்த விபரங்களும் தமக்கு காவல்துறையினரால் வழங்கப்படவில்லை என உயர் ஸ்தானிகராலயம் கூறியது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் வியாழக்கிழமை (07) தெரிவித்தனர்.

இதனால் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என Ottawa காவல்துறை கூறுகிறது.

Related posts

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

வார இறுதியில் நடைபெறும் Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Gaya Raja

Leave a Comment