December 12, 2024
தேசியம்
செய்திகள்

Durham தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

Ontario மாகாணத்தின் Durham தொகுதியில் இடைத் தேர்தல் திங்கட்கிழமை (04) நடைபெறுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை நடைபெறுகிறது.

Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் வழக்கறிஞர் Jamil Jivani Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்

Robert Rock, Liberal கட்சியின் வேட்பாளராகவும், Chris Borgia NDP கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

தமிழர்கள் வாழும் Oshawa நகரின் ஒரு பகுதியை உள்ளடக்கிய Durham தொகுதி January 2004 முதல் Conservative கட்சியினால் பிரதிநிதித்துவ படுத்தப்படுகிறது.

August 2020 முதல் February 2022 வரை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக Erin O’Toole பணியாற்றினார்.

2012ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த இலைத் துளிர் காலத்தில் தனது பதவியில் இருந்து விலகியிருந்தார்.

Related posts

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகள்

Lankathas Pathmanathan

கனடாவில் இதுவரை 112 Monkeypox தொற்றுகள்

Toronto சர்வதேச திரைப்பட விழா வியாழன் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment