தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர்களின் நிதியுதவியுடன் இலங்கை தமிழ் பாடசாலையில் புதிய கட்டிடத்தொகுதி

கனடிய தமிழர்களின் நிதியுதவியுடன் இலங்கை கேகாலை-தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் கட்டிடத்தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் புதிய விஞ்ஞான ஆய்வு கூடம், வகுப்பறைகளை கொண்ட கட்டிடத்தொகுதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் Eric Walsh பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதற்கான நிதி கனடிய தமிழர் பேரவையின் 15வது வருடாந்த கனடிய தமிழர் நிதி சேர் நடையின் போது  திரட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வளையத்துக்குட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் மண்சரிவு காரணமாக 2016 ஆம் ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Related posts

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என ஆலோசனை

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment