தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

கனடாவின் மிக முக்கியமான பிரதமர்களில் ஒருவரான Brian Mulroney காலமானார்.

முன்னாள் பிரதமரும், Conservative கட்சியின் தலைவருமான Brian Mulroney தனது 84வது வயதில் வியாழக்கிழமை (29) காலமானார். அவரது ஈர்க்கக்கூடிய – இன்னும் சில நேரங்களில் பிளவுபடுத்தும் – அரசியல் வாழ்க்கையில், Brian Mulroney நாட்டில் ஒரு தெளிவான அடையாளத்தை விட்டுச் செல்கிறார்.

தேசிய, உலக விவகாரங்களில் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் அவர் கனடாவை வழிநடத்தி சென்றார். ஒன்பது ஆண்டு கனடிய பிரதமராக இருந்த அவர் NAFTA ஒப்பந்தத்தை  எட்டியதுடன், GST வரியை அறிமுகப்படுத்தினார்.

குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் அவர் அமைதியாக இறந்தார் என அவரது குடும்பம் அறிவித்தது. இவரது மரணத்தை அறிந்ததும் நாடாளுமன்றம் அதன் நடவடிக்கைகளை ஒத்திவைத்தது. கனடா முழுவதிலும் இருந்து அரசியல் பிரமுகர்கள் தமது இரங்கல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Brian Mulroney கனடாவின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரதமர்களில் ஒருவர்.

அவரது காலத்தில் மிகவும் சவாலான சிக்கல்களைச் எதிர்கொள்ள துணிவுள்ள ஒரு தலைவராக அவர் அறியப்பட்டார்.  அர்ப்பணிப்புள்ள ஆதரவாளர்களை பெற்றதுடன்  கடுமையான விமர்சகர்களை தோற்றுவிக்கும் வகையில் அவர் தனது அரசியலை முனகர்த்தினார்

ஆரம்ப காலம் முதல் அரசியல் அபிலாசைகள் கொண்டவராக இருந்தார் Brian Mulroney.

Quebec மாகாணத்தின் Baie-Comeau நகரில் ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் அவர். அரசியல் அறிவியல் கற்கும் பல்கலைக்கழக மாணவராக Brian Mulroney, Conservative பிரதமர்  John Diefenbakerகரின் ஆலோசகரானார். அவர் பல ஆண்டுகளாக Conservative அரசியல் வளர்ச்சிக்கு பின்னணியில்  கடுமையாக உழைத்தவர்.

சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், 1976 இல் Progressive Conservative  தலைமை பதவிக்கு போட்டியிட்டவர். அந்த தேர்தலில் அவர் Joe Clarkகிடம் தோல்வியடைந்தார்.

1983 இல் Progressive Conservative தலைமையை வென்றபோது அதிகாரத்திற்கான அவரது நாட்டம் உச்சகட்டத்தை அடைந்தது. அவர் முதன் முதலில் Nova Scotia மாகாணத்தின், Central Nova தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Brian Mulroney 1984 ஆம் ஆண்டு கடுமையான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து, கனடிய வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை வென்று பெரும்பான்மை ஆட்சி அமைத்தார்.

கனடாவின் 18ஆவது பிரதமராக மிகவும் கடினமான பல முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

Quebec மாகாணத்தின் Manicouagan தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டை ஆண்ட அவரது ஒன்பது ஆண்டு காலப்பகுதி நாட்டைப் பலப்படுத்திய, பிரித்த காலமாக இருந்தது.

Quebec மாகாணத்தை அரசியலமைப்பிற்குள் கொண்டு வர இரண்டு முக்கிய முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். அவை இரண்டும் தோல்வியடைந்தன. அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை கட்டியெழுப்பிய அவர், Ronald Reagan, George Bush Sr. ஆகிய அமெரிக்க ஜனாதிபதிகளுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர்.

சர்வதேச அரங்கில் கனடாவிற்கு ஒரு புதிய மரியாதையை பெற்றுக் கொடுத்தவர் Brian Mulroney. நிறவெறிக்கு எதிராக நாடுகளைத் திரட்டியதுடன், தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

தனது இரண்டாவது பெரும்பான்மையை வென்ற பின்னர், மெக்சிகோவை உள்ளடக்கிய “வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – North American Free Trade Agreement” என்ற விரிவாக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த காலத்தில் தான் அவர் சரக்கு மற்றும் சேவை வரியை – Goods and Services Tax (GST) அறிமுகப்படுத்தினார். பெரிதும் விமர்சிக்கப்பட்ட இந்த வரி 1991 இல் நடைமுறைக்கு வந்து,  இன்று வரை நடைமுறையில் உள்ளது. கனடிய பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்ட போது 1992இல் Brian Mulroneyயின் அரசியல் செல்வாக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்தது.

1993இல் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த நிலையில், சில மாதங்களில் அவரது அதிகாரம் Kim Campbellளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் Kim Campbell கனடாவின் முதல் பெண் பிரதமரானார்.

பதவியை விட்டு வெளியேறிய பின்னர், அவரது கட்சி 1993 பொது தேர்தலில் பெரும் தோல்வியை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் Jean Chretien தலைமையிலான Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை வெற்றி கொண்டது.

ஜேர்மன்-கனடிய ஆயுத வியாபாரி Karlheinz Schreiber என்பவரிடமிருந்து Airbus jets விமானங்களை Air கனடாவிற்கு விற்பனை செய்ததில் $5 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக Jean Chretien அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டார்.

பல வருடங்கள் அதிக கவனம் செலுத்தப்பட்டு தொடர்ந்த இந்த குற்றச்சாட்டு விசாரணையின் பின்னர் 1997 இல், Brian Mulroney  குற்றமற்றவர் என RCMP அறிவித்தது. அதன் பின்னர் Jean Chretien ஆட்சி அவரிடம் மன்னிப்புக் கோரியது. Brian Mulroney  அரசாங்கத்தின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து 2 மில்லியன் இழப்பீடு பெற்றார்.

Related posts

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

Gaya Raja

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

Lankathas Pathmanathan

ஓராண்டு முடிவில் Wet’suwet’en பழங்குடி மக்களின் போராட்டங்கள் பயனளித்தனவா?

Gaya Raja

Leave a Comment