தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் கடுமையான குளிர் நிலை

நாடளாவிய ரீதியில் இந்த வாரம் சில மாகாணங்களில் கடுமையான குளிர் காலநிலை எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில மாகாணங்களில் இந்த வாரம் 25 cm வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Ontario மாகாணத்தின் சில பகுதிகளில் 5 முதல் 10 cm வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என சுற்றுச்சூழல் கனடா திங்கள்கிழமை (26) காலை எச்சரித்தது.

Ontario, Quebec ஆகிய மாகாணங்களில் இந்த வாரத்தின் நடுப்பகுதியில் கடும் புயல் எதிர்பார்க்கப்படுகிறது.

Quebecகில் உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Alberta உட்பட மத்திய Prairies மாகாணங்களில் 10 முதல் 25 cm வரை பனிப்பொழிவு  எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு Prairies மாகாணங்களில் குளிர்நிலை  -45 முதல் -50 வரை உணரப்படும்.

குளிர்கால புயல் எச்சரிக்கைகள் British Colombia மாகாணத்திற்கு விடுக்கப்பட்டது.

அங்கு 10 முதல் 25 cm வரை பனிப்பொழிவு  எதிர்பார்க்கப்படுகிறது.

Atlantic கனடா, Northwest Territories, Yukon ஆகிய பகுதிகளுக்கு திங்கட்கிழமை காலை நிலவரப்படி
வானிலை எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

Nunavut பகுதியில் கடுமையான குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அங்கு சில பகுதிகளில் குளிர்நிலை  -55 வரை உணரப்படும்.

Related posts

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

Pearson விமான நிலையத்தில் திருடப்பட்ட தங்கம் இந்தியா அல்லது துபாயில்?

Lankathas Pathmanathan

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

Leave a Comment