December 12, 2024
தேசியம்
செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவித்துள்ளது.

10 தனிநபர்கள், 153 ரஷ்ய நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் வெள்ளிக்கிழமை (23) அறிவிக்கப்பட்டது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த தடைகளை அறிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சனிக்கிழமை (24) இரண்டு ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டன.

இங்கிலாந்து, அமெரிக்காவுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தடைகளை கனடா அறிவித்துள்ளது.

இந்தத் தடைகள் ரஷ்ய இராணுவத்தை ஆதரிக்கும் தனிநபர்கள், நிறுவனங்களை குறிவைக்கின்றன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனடிய அரசாங்கத்தின் புதிய தடைகளை “வெற்று அடையாளச் செயல்” என கனடாவிற்கான ரஷ்ய தூதர் கூறினார்.

Related posts

Ottawaவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

NDP முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமற்றது: Doug Ford!

Lankathas Pathmanathan

Pharmacare ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிரதமர் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment