ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவுக்கான ரஷ்ய தூதர் கனடிய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny மர்மமான முறையில் ரஷ்ய சிறையில் உயிரிழந்தார்.
இந்த மரணத்திற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ரஷ்யாவின் தூதுவர் Oleg Stepanov கனடாவின் வெளியுறவு அமைச்சரினால் அழைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு கனடாவின் கண்டனத்தை தெரிவிக்க Oleg Stepanov, கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Jolyயினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தில் கனடாவின் கடுமையான கண்டனத்தை ஏற்கனவே கனடிய மூத்த அதிகாரி ஒருவர் Oleg Stepanovவுக்குத் தெரிவித்ததாக கனடிய வெளியுறவு அமைச்சரின் அலுவலகம் புதன்கிழமை பிற்பகல் உறுதிப்படுத்தியது.
இந்த மரணம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்தை கனடிய வெளியுறவு அமைச்சின் அதிகாரி கேட்டுக் கொண்டார்.