தேசியம்
செய்திகள்

Ontarioவில் தட்டம்மை – measles – எச்சரிக்கை

தட்டம்மை – measles – நோயின் பரவல் குறித்த எச்சரிக்கை Ontario மாகாண தலைமை சுகாதார அதிகாரியால் வெளியிடப்பட்டது.

ஐரோப்பாவில் தட்டம்மை நோயின் அதிகரிப்புக்கு மத்தியில் கனடாவில் இதன் பரவல் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் Ontario மாகாணத்தில் தட்டம்மை நோய் பரவலுக்கு தயாராக இருக்குமாறு பொது சுகாதார பிரிவுகளை மாகாண தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore எச்சரித்துள்ளார்.

தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இதுவரை கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அவர்களில் இரண்டு பேர் Ontarioவில் உள்ளனர்.

Ontarioவில் Peel பிராந்தியம், Toronto நகரம் ஆகியவற்றில் இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

Ontarioவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் குழந்தைகள் எனவும் அவர்கள் அண்மையில் கனடாவுக்கு வெளியே பயணம் செய்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

2023 இல் கனடாவில் 12 தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாவது அலையின் உச்சத்திலிருந்த தொற்றின் எண்ணிக்கை 70 சதவீதம் வரை குறைந்தது

Gaya Raja

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி

Lankathas Pathmanathan

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment