February 22, 2025
தேசியம்
செய்திகள்

Montreal அடுக்குமாடி கட்டிட தாக்குதலில் 2 பெண்கள் கொலை – ஒருவர் காயம்

Montreal நகருக்கு மேற்கே அடுக்குமாடி கட்டிடத்தில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 2 பெண்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்.

வியாழக்கிழமை காலை Montrealக்கு மேற்கே அடுக்குமாடி கட்டிடத்தில் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் – மற்றொரு பெண் படுகாயமடைந்ததாக Quebec மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

44 வயதான சந்தேக நபர் காவல்துறையினரால் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் ஒருவர் சந்தேக நபரின் தாயார் என தெரியவருகிறது.

ஏனைய இரண்டு பெண்களும் அதே அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

பலியானவர்கள் 68, 53 வயதுடைய இரண்டு பெண்கள் என அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மூன்றாவது பெண், 70 வயதானவர் என கூறப்படுகிறது.

இவர் ஆபத்தான நிலையில் Montreal மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

Lankathas Pathmanathan

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை June 25

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் 800க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

Leave a Comment